காஸாவை விட்டு வெளியேறவுள்ள வெளிநாட்டவர்கள்
இஸ்ரேலிலுள்ள வெளிநாட்டவர்கள் மற்றும் காயமடைந்த 60 பேர் எதிர்வரும் வியாழக்கிழமை காசாவை விட்டு வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது
குறைந்தது 400 வெளிநாட்டவர்கள் காசாவை விட்டு வெளியேறி வியாழன் அன்று ரஃபா கிராசிங் வழியாக எகிப்திற்குள் நுழைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று கிராசிங்கில் உள்ள பாலஸ்தீன அதிகாரி வேல் அபு உமர் தெரிவித்துள்ளார்.
மேலும் காயமடைந்த 60 பேரும் காசாவை விட்டு வெளியேற உள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
வெளியிடப்பட்ட பெயர் பட்டியல்
காசாவில் இருந்து வெளியேறுவதற்கு அனுமதிக்கப்பட்ட 595 நபர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியல் ஒரே இரவில் வெளியிடப்பட்டுள்ளது.
பட்டியலில் உள்ளவர்கள் வியாழக்கிழமை உள்ளூர் நேரப்படி காலை 7 மணிக்கு ரஃபா கிராசிங்கிற்கு வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
இறுதியில் எகிப்துக்கு மாற்றுவதற்கான காலக்கெடு எதுவும் வழங்கப்படவில்லை. பெயர் பட்டியலில் சுமார் 400 பேர் அமெரிக்கப் பிரஜைகள் ஆவர்.
மீதமுள்ளவர்கள் 14 நாடுகளைச் சேர்ந்த குடிமக்கள் ஆவர். குறைந்த எண்ணிக்கையிலான வெளிநாட்டினர் மற்றும் காயமடைந்த பாலஸ்தீனியர்களை வெளியேற்ற அனுமதிக்கும் வகையில் ரஃபா கிராசிங் கடந்த புதன்கிழமை ஓரளவு திறக்கப்பட்டது.
இஸ்ரேல் - ஹமாஸ் போர் ஆரம்பமானதிலிருந்து கடந்த புதன்கிழமை நீண்ட நாட்களுக்குப் பிறகு ரஃபா கிராசிங் திறக்கப்பட்டுள்ளது.
நாட்டிற்குள் நுழைந்து தற்போது சிகிச்சையில் 45 பேர் உள்ளதாக எகிப்திய அரசாங்க அதிகாரி ஒருவர் புதன்கிழமை உறுதிப்படுத்தினார்.