சீனாவின் முன்னாள் பிரதமர் ஜூ ரோங்ஜி காலமானார்
சீனாவின் முன்னாள் பிரதமரும், அந்நாட்டின் பொருளாதாரச் சீர்திருத்தங்களின் சிற்பியாகக் கருதப்படுபவருமான ஜூ ரோங்ஜி (Zhu Rongji)தனது 98ஆவது வயதில் நேற்று (12) பெய்ஜிங்கில் காலமானாதாக சீன ஊடகங்க்கள் தெரிவித்துள்ளன.
சீனாவில் 1998 முதல் 2003ஆம் ஆண்டு வரை சீனாவின் பிரதமராகப் பதவி வகித்த ஜூ ரோங்ஜி (Zhu Rongji) , சீனா உலக வர்த்தக அமைப்பில் இணைவதற்கு முக்கியப் பங்காற்றினார்.

முன்னாள் பிரதமர் ஜூ ரோங்ஜி (Zhu Rongji) ஊழலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன், சந்தை சார்ந்த பொருளாதாரக் கொள்கைகளை அறிமுகப்படுத்தி பல்வேறு சீர்திருத்தங்களையும் முன்னெடுத்தார்.
இதன் மூலம் சீனா சர்வதேச அளவில் பொருளாதார வல்லரசாக உருவெடுப்பதற்கான அடித்தளத்தை அமைத்த முக்கிய தலைவர்களில் ஒருவராக அவர் (Zhu Rongji) கருதப்படுகிறார்.
இந்தியா – சீனா இருதரப்பு உறவுகளை மேம்படுத்தி, பரஸ்பர நம்பிக்கையை வலுப்படுத்தும் நோக்கில், 2002ஆம் ஆண்டு ஜூ ரோங்ஜி (Zhu Rongji)இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டார்.
அப்போது இந்தியாவின் பிரதமராக இருந்த அடல் பிகாரி வாஜ்பாயுடன் அவர் விரிவான பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தார்