சிந்து நதியில் தண்ணீர் வராவிட்டால் இந்தியர்களின் இரத்தம் ஒடும் ; வன்மத்தை கக்கும் பாகிஸ்தான்
ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் சுற்றுலாப்பயணிகளை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் சுற்றுலாப்பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர்.
பஹல்காம் தாக்குதலையடுத்து, இந்தியா உடனடியாக பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. சிந்து நதி நீர் ஒப்பந்தத்தையும் இரத்து செய்துள்ளது.
இந்த நிலையில், சிந்து நதியில் தண்ணீர் வராவிட்டால் இந்தியர்களின் இரத்தம் ஒடும் என்று பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.
இந்தியாவுக்கு நான் ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். சிந்து நதி பாகிஸ்தானுடையது. அந்த நதி எங்களுடையதாகவே தொடர்ந்து இருக்கும்.
நமது தண்ணீர் அந்த நதியில் ஓடும். இல்லையென்றால் அவர்களின் ரத்தம் ஓடும்.
தங்கள் உள்நாட்டு பாதுகாப்பில் கோட்டை விட்ட இந்தியா, மக்களின் கவனத்தை திசை திருப்ப பாகிஸ்தானை பலிகடா ஆக்குகிறது" என்று கூறியுள்ளார்.