கனடாவில் சமூக நலப் பணி என்ற பேர்ர்வையில் மோசடியில் ஈடுபட்ட பெண்
கனடாவின் ரொறன்ரோ நகரில், சமூக நலப் பணியாளருக்கான சான்றிதழ் இடைநிறுத்தப்பட்ட பின்னரும், அதை மறைத்து ஒரு குடும்பத்திடம் பணம் பெற்றுப் பணியாற்றியதாகக் கூறி பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பதிவுபெற்ற சமூக நலப் பணியாளராக இருந்த பெண்ணை ஒரு குடும்பத்தினர் உதவிக்காகப் பணியில் அமர்த்தியிருந்தனர்.
இந்நிலையில கடந்த மே மாதம் இதுகுறித்துக் காவல்துறைக்கு முதல் தகவல் கிடைத்தது.

காவல்துறையின் தகவல்படி, சந்தேகத்திற்குரிய அப்பெண்ணின் சமூக நலச் சான்றிதழ் கடந்த 2025 ஏப்ரல் மாதமே இடைநிறுத்தப்பட்டது.
எனினும், சான்றிதழ் இடைநிறுத்தப்பட்டதை மறைத்து, அவர் தொடர்ந்து அந்த குடும்பத்திற்குப் பணியாற்றிப் பணம் பெற்று வந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, ரொறன்ரோவைச் சேர்ந்த கிலியன் கிராஃப்ட் ரோட்ஸ்டீன் என்ற பெண்ணை வியாழக்கிழமை கைது செய்த காவல்துறையினர் அவர் மீது பல பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
5,000 டொலருக்கும் அதிகமான தொகையை மோசடி செய்தது, போலி ஆவணங்களைப் பயன்படுத்தியது, நீதிமன்ற உத்தரவை மீறியது.
இந்தக் குற்றச்சாட்டுகள் இதுவரை நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை. இவரால் மேலும் சிலர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என விசாரணை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்தவர்கள் எவரும் இருந்தால், 'க்ரைம் ஸ்டாப்பர்ஸ்' அமைப்பை ரகசியமாகத் தொடர்புகொண்டு தகவல் அளிக்குமாறு காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.