உக்ரைன் முன்னாள் எரிசக்தி அமைச்சர் கைது – பெரும் ஊழல் வழக்கில் திருப்பம்
ரஷ்யா–உக்ரைன் போரின் பின்னணியில், உக்ரைனின் முன்னாள் எரிசக்தி அமைச்சர் ஒருவர் நாட்டை விட்டு வெளியேற முயன்றபோது கைது செய்யப்பட்டுள்ளார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மிடாஸ் (Midas) வழக்கின் ஒரு பகுதியாக முன்னாள் எரிசக்தி அமைச்சரை எங்கள் விசாரணை அதிகாரிகள் கைது செய்துள்ளனர் என கூறப்பட்டுள்ளது.
இந்த “Midas” வழக்கு, உக்ரைனின் எரிசக்தித் துறையில் பரவலான ஊழல் குற்றச்சாட்டுகளைச் சுற்றிய விசாரணையாகும். கடந்த ஆண்டு இது அரசியல் நெருக்கடியையும் ஏற்படுத்தியது.

இந்த முன்னாள் அமைச்சரின் பெயரை உக்ரைன் அரச அதிகாரிகள் நேரடியாக வெளியிடவில்லை.
எனினும், 2021 முதல் 2025 வரை எரிசக்தி அமைச்சராக இருந்தவரை குறிக்கிறது என்று தெரிவித்துள்ளது.
பல உக்ரைன் ஊடகங்கள், அந்த முன்னாள் அமைச்சர் ஜெர்மன் கலுசென்கோ எனக் குறிப்பிட்டுள்ளன.
இந்த கைது நடவடிக்கை, Volodymyr Zelensky தலைமையிலான அரசில் கடந்த ஆண்டு ஏற்பட்ட பெரும் ஊழல் சர்ச்சைக்கு தொடர்ச்சியாக அமைந்துள்ளது.
அந்த சர்ச்சை காரணமாக பதவியில் இருந்த அமைச்சர் மற்றும் முன்னாள் அமைச்சர் இருவரும் ஜனாதிபதி கோரிக்கையின்பேரில் ராஜினாமா செய்தனர். அவர்கள் குற்றச்சாட்டுகளை மறுத்திருந்தனர்.
அதேபோல் ஜனாதிபதியின் அலுவலகத் தலைவர் ஆண்ட்ரி யெர்மக் பதவி விலகியதும் குறிப்பிடத்தக்கது.
அரசுடைமை நிறுவனங்கள் — குறிப்பாக அணு மின் நிலையங்களை இயக்கும் Energoatom — முக்கிய எரிசக்தி கட்டமைப்புகளை பாதுகாப்பதற்கான பணிகளுக்காக ஒப்பந்த நிறுவனங்களுக்கு செலுத்திய தொகைகளில் இருந்து சுமார் 100 மில்லியன் அமெரிக்க டாலர் மோசடி செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.