சீனாவில் கனேடிய பிரஜைகள் நால்வருக்கு மரண தண்டனை!
கனேடிய பிரஜைகள் நால்வருக்கு சீனாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக கனடா வெளியுறவுத்துறை அமைச்சர் மெலனி ஜோலி கூறியுள்ளார்.
போதைப்பொருள், உளவு மற்றும் ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகளில் கைதாகும் நபர்களுக்கு சீனாவில் மரண தண்டனை விதிக்கப்படுகிறது.
இது குறித்த உரிய தகவல்களை அந்த நாடு வெளியிடா விட்டாலும், உலகில் மரண தண்டனை நிறைவேற்றப்படும் நாடுகளில் சீனாவும் ஒன்று என மனித உரிமை அமைப்புகள் தெரிவித்து உள்ளன.
அதேநேரத்தில் இரட்டை குடியுரிமையையும் சீனா இதுவரை அங்கீகரிக்கவில்லை. வெளிநாட்டினருக்கு சீனாவில் மரண தண்டனை நிறைவேற்றப்படுவது என்பது அரிதான ஒன்றாகவே உள்ளது.
இந்நிலையில், போதைப்பொருள் பிரச்சினையில் இந்த ஆண்டு கைதான கனடாவை சேர்ந்த நான்கு பேருக்கு சீனா மரண தண்டனை நிறைவேற்றி உள்ளதாக கனடா வெளியுறவுத்துறை அமைச்சர் மெலனி ஜோலி கூறியுள்ளார்.
மரண தண்டனையை தடுக்க முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றியதாகவும் தெரிவித்தார்.
இதேநேரம் பொறுப்பற்ற கருத்துகள் கூறுவதை கனடா நிறுத்த வேண்டும் எனவும் சட்டப்படியே தாம் செயற்பட்டுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.
தமது இறையாண்மையை கனடா மதிக்க வேண்டும் எனவும் சீனா வலியுறுத்தியுள்ளது.