கடவுச்சீட்டு பெறுவோரின் நலன் கருதி கனேடிய அரசாங்கத்தின் நடவடிக்கை
கடவுச்சீட்டு பெற்றுக் கொள்வதற்காக காத்திருப்போரின் நலனைக கருத்திற் கொண்டு கனேடிய அரசாங்கம் மேலும் கடவுச்சீட்டு அலுவலகங்களை திறந்துள்ளது.
நாட்டில் கடவுச்சீட்டு பெற்றுக் கொள்வதற்காக மக்கள் நீண்ட காலம் காத்திருக்க நேரிட்டுள்ளது.
இதனை தவிர்க்கும் நோக்கில் அரசாங்கம் புதிய அலுவலகங்களின் ஊடாக சேவை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது.
கனடாவின் சமூக அபிவிருத்தி அமைச்சர் காரீனா கோல்ட் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அல்பர்ட்டாவின் ரெட் டீர், ஒன்றாரியோவின் சால்ட் மாரி, கியூபெக்கின் டோரிஸ் ரைவர்ஸ் மற்றும் பிரின்ஸ் எட்வர்ட் ஐலண்ட் இன் சார்லட்டவுன் ஆகிய இடங்களில் புதிய கடவுச்சீட்டு அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளன.
கிராமிய பகுதிகளில் வசிப்பவர்களுக்கு கடவுச்சீட்டு பெற்றுக் கொள்வதற்கு கடுமையான அசௌகரியங்கள் ஏற்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பிரதான அலுவலகங்களில் நிலவி வரும் நெரிசல் நிலையை கட்டுப்படுத்தும் நோக்கில் இவ்வாறு பல இடங்களில் அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் முதல் இதுவரையில் புதிய மற்றும் கடவுச்சீட்டு புதுப்பித்தலுக்காக 1.1 மில்லியன் பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.
புதிய அலுவலகங்கள் திறக்கப்பட்டாலும் கடவுச்சீட்டு பெற்றுக் கொள்வதற்காக கனடாவில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் தொடர்ந்தும் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.