சீனாவில் அதிகாரபூர்வமாகப் பட்டம் பெற்ற நான்கு ரோபோக்கள்
சீனாவின் ஹங்சோ நகரில் உள்ள ரோபோ பயிற்சி நிலையத்தில் இரண்டு மாதங்கள் கடுமையான பயிற்சி பெற்ற நான்கு ரோபோக்கள் தற்போது அதிகாரபூர்வமாகப் பட்டம் பெற்றுள்ளன.
வழிகாட்டுதல், ஆய்வு செய்தல் மற்றும் பியானோ வாசித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளைத் திறம்பட மேற்கொள்ளும் வகையில் இந்த ரோபோக்கள் சிறப்பாகப் பயிற்றுவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள இந்த நான்கு ரோபோக்களும் சீனா மற்றும் தென் கொரியாவில் உள்ள பல்வேறு துறைகளில் விரைவில் பணியமர்த்தப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.
தொழில்நுட்பத் துறையில் வேகமாக முன்னேறிவரும் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் ரோபோ தொழில்நுட்பத்தின் அபார வளர்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக இந்த ரோபோக்களின் பயிற்சி மற்றும் பட்டமளிப்பு நிகழ்வு அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.