நான்காவது நாளாகவும் தொடரும் தாக்குதல்
ஜம்மு, காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுக்கும் இந்திய பாதுகாப்பு தரப்பினருக்கும் இடையிலான தொடரும் தாக்குதல் சம்பவங்கள் நான்காவது நாளாகவும் தொடர்கின்றது.
பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இதுவரையில் நான்கு இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதேநேரம் நேற்றைய தினம் சுற்றிவளைப்பில் ஈடுபட்ட இராணுவத்தினரில் ஒருவர் காணாமல் போயுள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்தும் அப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் பயங்கரவாதிகளை அடையாளம் காண்பதற்காக பாதுகாப்பு தரப்பினர் ஆளில்லா விமானக் கருவிகளை பயன்படுத்தியுள்ளனர்.
இந்த பயங்கரவாத செயற்பாடுகளுக்கு பின்னணியில் லஷ்கர்.இ.தொய்பா அமைப்பினர் உள்ளதாக இந்திய பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.