கோவிஷீல்டு தடுப்பூசிக்கு அங்கீகாரம் அளித்துள்ளது பிரான்ஸ்!
கோவிஷீல்டு தடுப்பூசிக்கு அங்கீகாரம் அளித்துள்ள பிரான்ஸ், அதன் இரண்டு டோசுகளையும் போட்ட இந்திய குடிமக்கள் பிரான்சுக்கு வரலாம் என அனுமதியும் அளித்துள்ளது.
பிரான்ஸ்,கோவிஷீல்டை அங்கீகரிக்கும் 13 ஆவது ஐரோப்பிய நாடாகும். ஐரோப்பிய ஒன்றியத்தை பொறுத்தவரை 11 ஆவது நாடாக பிரான்ஸ் கோவிஷீல்டுக்கு அங்கீகாரம் வழங்கி உள்ளது. கோவிஷீல்டு போட்டவர்களுக்கு ஐரோப்பிய நாடுகளில் பயணம் செயவதில் சிக்கல் உள்ளதாக கூறப்பட்ட நிலையில், அது மெல்ல குறைந்து அங்குள்ள முக்கிய நாடுகள் இந்தியாவின் கோவிஷீல்டை அங்கீகரிக்க துவங்கி உள்ளன.
எனினும் 27 உறுப்பினர் ஐரோப்பிய ஒன்றியத்தில் பாதிக்கும் மேற்பட்ட நாடுகள் இதுவரை அதற்கு அங்கீகாரம் அளிக்கவில்லை. அதன் தயாரிப்பாளரான சீரம் இந்தியா விண்ணப்பித்தால் அது குறித்து பரிசீலிக்கப்படும் என அவை தெரிவித்துள்ளன.