பிரான்ஸில் பொலிஸார் மீது துப்பாக்கி சூடு நடத்திய சந்தேக நபர் கைது
இரண்டு பொலிஸார் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய குற்றச்சாட்டில் கைதான கைதி முகமது அம்ராவை ஒரு கும்பல் சிறை வேனில் இருந்து மீட்டு தப்பிச் சென்ற சம்பவம் பிரான்சில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ள நிலையில், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்த பொலிஸார் விசாரணை நடத்தினர்.
முகமது அம்ராவை ஏற்றிச் சென்ற சிறை வேன் பிரான்சின் வடக்குப் பகுதியில் உள்ள இன்கார்வில்லில் உள்ள ஒரு சுங்கச்சாவடியில் நின்றது.
அப்போது அங்கு ஒரு கும்பல் கார்களில் வந்தது. அவர்கள் தங்கள் வாகனங்களை சிறை வேன் மீது மோதினர். முகமூடி அணிந்திருந்த அக்கும்பலை சேர்ந்தவர்கள், பொலிஸார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
முகமது அம்ரா மற்றும் அவரை மீட்ட கும்பலை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். நூற்றுக்கணக்கான பாதுகாப்புப் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் இதனைத் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளை கண்டுபிடிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
Occured today in #France. Members of a gang attacked a prison transport van that was carrying their leader, an Algerian thief and drug dealer, Mohammed Amra known as 'The Fly'. They escaped with their leader after killing three prison guards. As it can be seen in this CCTV… pic.twitter.com/vNR6zJy1oI
— Babak Taghvaee - The Crisis Watch (@BabakTaghvaee1) May 14, 2024