பிரான்ஸில் தீவிரமாக பரவும் கொரோனா! ஒரே நாளில் 3.92 லட்சம் பேர் பாதிப்பு
பிரான்ஸில் கடந்த 24 மணித்தியாலத்தில் 3 இலட்சத்து 92 ஆயிரத்து 168 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி செய்யப்பட்டுள்ள நிலையில் 268 பேர் உயிரிழந்துள்ளனர்.
பிரான்ஸில் இதுவரையில் 1 கோடியே 81 இலட்சத்து 22 ஆயிரத்து 724 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 1 இலட்சத்து 30 ஆயிரத்து 15 பேர் மரணமடைந்திருப்பதாக தெரியவந்துள்ளது.
பிரான்ஸில் தற்போது வரை Covid-19 தொற்றினால் பாதிக்கப்பட்டு 66 இலட்சத்து 11 ஆயிரத்து 4 பேர் அங்குள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், Covid-19 தொற்றால் 3,760 பேர் தீவிர அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பிரான்ஸில் கடந்த 24 மணி நேரத்தில் 3 இலட்சத்து 27 ஆயிரத்து 956 பேர் தொற்றிலிருந்து மீண்ட நிலையில், இதுவரையில் 1 கோடியே 13 இலட்சத்து 81 ஆயிரத்து 705 பேர் மொத்தமாக குணமடைந்துள்ளனர்.