58 ஆண்டுகளில் 89 சிறார்கள் வன்கொடுமை; பிரான்ஸ் ஆசிரியர் தொடர்பில் பகீர் தகவல்
55 ஆண்டுகளில், சுமார் 89 சிறார்களை பாலியல் வன்கொடுமை செய்த பிரான்ஸ் ஆசிரியர் ஒருவர் குறித்த தற்போது பொலிஸாருக்கு தகவல் தெரியவந்துள்ளது.
பிரான்சின் நியூ காலிடோனியாவில் ஆசிரியராக பணியாற்றி வந்தவர் ஜாக் லெவ்யூக்ளே, 79 வயதான இவர், 55 ஆண்டுகளுக்கு மேலாக, தன்னிடம் படிக்க வந்த சிறுவர்களை பாலியல் வன்கொடுமை செய்தது தற்போது தெரிய வந்துள்ளது.

கடந்த 1967 முதல் 2022 வரை அவர் இத்தகைய கொடுமையை அரங்கேற்றியுள்ளார். இது தொடர்பாக 'பென்டிரைவ்'வில், ஜாக் எழுதி வைத்திருந்த ஆவணங்கள் அவரது உறவினர் ஒருவர் கண்டெடுத்துள்ளார்.
இதன் வாயிலாக 89 பாதிக்கப்பட்ட சிறார்களை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர். சந்தேக நபர் பிரான்ஸ் மட்டுமின்றி, இந்தியா, ஜேர்மனி, சுவிட்ஸர்லாந்து உள்ளிட்ட நாடுகளிலும் பாலியல் லீலைகளை நிகழ்த்தியமை விசாரணையில் தெரியவந்து அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.