பிரான்ஸில் குளிர்காலத்துக்கான எரிவாயு தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!
குளிர் காலத்துக்கு தேவையான எரிவாயு முழுமையாக கையிருப்பில் உள்ளதாக எரிசக்தி ஒழுங்குமுறை ஆணையம் (Commission de régulation de l'énergie) அறிவித்துள்ளது.
ரஷ்யா - உக்ரைன் யுத்தத்தை அடுத்து பிரான்ஸுக்கு தேவையான எரிவாயு பெறுவதில் பெரும் சிக்கல்கள் எழுந்தது.
90 வீதமான எரிவாயு மட்டுமே கையிருப்பில் உள்ளதாக கடந்த ஓகஸ்ட் மாதம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது எரிவாயு முழுமையாக சேமிக்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று ஒக்டோபர் 5 ஆம் திகதி, நிலவரப்படி பிரான்ஸில் தற்போது 130 TWh எரிவாயு கையிருப்பில் உள்ளது எனவும், இந்த குளிர் காலத்தின் தேவையை பூர்த்தி செய்ய போதுமானது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யா - உக்ரைன் யுத்தத்தின் பின்னர் பிரான்ஸ் நோர்வேயிடம் இருந்து எரிவாயுவினை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.