பிரான்ஸில் ஒரே நாளில் 63 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா!
பிரான்ஸில் கொரோனா வைரஸ் தொற்றினால் 24 மணிநேரத்தில் 63,405 பேர் பாதிக்கப்பட்டதோடு 158 பேர் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரான்ஸில் இதுவரை மொத்தமாக 83 இலட்சத்து 34ஆயிரத்து 133 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 1 இலட்சத்து 20 ஆயிரத்து 832 பேர் உயிரிழந்துள்ளனர்.
பிரான்ஸில் தற்போது வரை Covid-19 தொற்றினால் பாதிக்கப்பட்டு 8இலட்சத்து 50ஆயிரத்து 693 பேர் அங்குள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், Covid-19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு 2,792 பேர் தீவிர அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பிரான்ஸில் 32,348 பேர் கடந்த 24 மணித்தியாலத்தில் குணமடைந்துள்ள நிலையில், இதுவரையில் வைரஸ் தொற்றிலிருந்து 73இலட்சத்து 62ஆயிரத்து 608 பேர் குணமடைந்துள்ளனர்.