பிரான்ஸ் - பரிஸில் ஆடம்பர ஹோட்டலில் திடீர் தீ விபத்து; அவசமாக வெளியேற்றப்பட்ட 400 பேர்!
பிரான்ஸ் - பரிஸில் உள்ள Le Bristol Paris என்ற பிரபல ஆடம்பர ஹோட்டலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து அங்கிருந்த 400 பேர் அவசரமாக வெளியேற்றப்பட்டதாக பிரான்ஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்றையதினம் (25) Paris நகரின் 8ஆம் வட்டாரத்தில், Palais de l'Élyséeக்கு அருகில் உள்ள இந்த ஹோட்டலில் ஏற்பட்ட தீ காரணமாக சுமார் 400 பேர் அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.

பாதுகாப்பு காரணங்களால் ஹோட்டல் சுற்றுப்புறம் மூடப்பட்டது
இந்த தீ விபத்து ஹோட்டலின் அடித்தளத்தில் உள்ள “Faubourg 114” உணவகத்தின் சமையலறையில் இருந்து தீ விபத்து தொடங்கியதாக கூறப்படுகிறது. தீயணைப்பு படையினர் விரைந்து செயல்பட்டு தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
சம்பவத்தில் மூன்று பேர் லேசாக காயமடைந்தனர். தீ விபத்துக்குப் பிறகு, ஹோட்டல் சுற்றுப்புறம் பாதுகாப்பு காரணங்களால் மூடப்பட்டது. Préfecture de police de Paris மக்கள் அந்தப் பகுதியைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தியது.
சாட்சிகள் கரும்புகை எழுந்ததையும், பல தீயணைப்பு வாகனங்கள் வந்ததையும் தெரிவித்தனர். ஹோட்டல் நிர்வாகம், நிலைமை முழுவதும் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், விருந்தினர்கள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பே முக்கியம் என்றும் தெரிவித்தது. இந்த ஹோட்டல் Oetker Group நிறுவனத்திற்குச் சொந்தமானது.