மீண்டும் ஜேர்மனின் அதிபரானார் பிரான்க் வால்டர் ஸ்டீன்மையர்
ஜேர்மனின் அதிபராக மீண்டும் பிரான்க் வால்டர் ஸ்டீன்மையர் (Frank-Walter Steinmeier) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஜேர்மனியின் நாடாளுமன்றத்தில் அதிபரை தேர்வு செய்யும் சிறப்பு கூட்டத் தொடர் நேற்று நடைபெற்றது. இதில் கீழவை மற்றும் 16 மாகாணங்களை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டு வாக்களித்தனர்.
இதில் பெரும்பான்மையான வாக்குகள் பெற்று பிரான்க் வால்டர் ஸ்டீன்மையர் (Frank-Walter Steinmeier) இரண்டாவது முறையாக அதிபராக தேர்வு செய்யப்பட்டு உள்ளார். அதிபராக தேர்வு செய்யப்பட்ட பின்னர் பிரான்க் ஸ்டீன்மையர் (Frank-Walter Steinmeier)உரையாற்றுகையில்,
ஜனநாயகத்திற்காக போராடுபவர்களுக்கு பக்கத்தில் நான் இருப்பேன். ரஷ்யா உக்ரைன் எல்லையில் படைகளை குவித்து வருவது அந்த நாட்டுக்கு ஆபத்து.
அங்கு உள்ள மக்கள் அச்சமின்றி வாழ்வதற்கான உரிமை உள்ளது. அதனை அழிக்க எந்த நாட்டுக்கும் உரிமை இல்லை என அவர் தெரிவித்தார்.