கனடாவில் வங்கி கணக்குகளை மோசடியாக பயன்படுத்திய 48 வயது பெண் கைது!
கனடாவில் வாடிக்கையாளர்களை போல நடித்து, பல வங்கிகளில் மோசடியாக ஆயிரக்கணக்கான டாலர்கள் திருடியதாக 48 வயதான ஒரு பெண் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சந்தேக நபரான நாடியா காம்பிடெல்லி (48), மார்ச் 20 அன்று டர்ஹாம் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
2022 பெப்ரவரி முதல் 2023 ஆகஸ்ட் வரை, பல வாடிக்கையாளர்களின் பெயரில் போலி அடையாளக் அட்டைகளை பயன்படுத்தி, வங்கிக் கணக்குகளை மோசடியாகச் செயல்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்தப் பெண் சுமார் 72,000 டொலருக்கும் மேல் மோசடி செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
கனடாவின் பிற பகுதிகளிலும் இதே மாதிரியான மோசடி வழக்குகளில் இந்த பெண் தொடர்புடையவர் என போலீசார் கூறியுள்ளனர்.
நாடியா காம்பிடெல்லி மீது 21 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த மோசடிகள் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் இருந்தால் அறிவிக்குமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.