கியூபெக்கை யாரும் மிரட்ட முடியாது – மாகாண முதல்வர்
மொன்றியலைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் பிரபல 'பாம்பர்டியர்' (Bombardier) விமான தயாரிப்பு நிறுவனத்தின் விற்பனையை அமெரிக்காவில் தடை செய்யப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அச்சுறுத்தல் விடுத்துள்ள நிலையில், அதற்கு கியூபெக் மாகாண அரசும் பாம்பர்டியர் நிறுவனமும் வலுவான பதிலடியைக் கொடுத்துள்ளன.
பாம்பர்டியர் தயாரிக்கும் விமானங்கள் போதுமான தரம் கொண்டவை அல்ல என்று விமர்சித்த டொனால்ட் டிரம்ப், கனடா தனது விமானங்களை அமெரிக்காவில் தொடர்ந்து விற்க வேண்டுமானால், அவற்றை அமெரிக்காவிலேயே தயாரிக்க வேண்டும் எனச் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார்.
டிரம்பின் இந்தக் கருத்துக்குப் கியூபெக் மாகாண முதல்வர் கிறிஸ்டின் ஃபிரெஷெட் பதிலடி கொடுத்துள்ளார்.

வம்புச்சண்டைக்கு நாங்கள் வம்புச்சண்டையால் பதிலளிக்க மாட்டோம். பாம்பர்டியர் கியூபெக்கின் பெருமை மற்றும் நமது பொருளாதாரத்தின் அடையாளம். ஆயிரக்கணக்கான கியூபெக் தொழிலாளர்கள் இதில் பணியாற்றுகின்றனர் என தெரிவித்துள்ளார்.
சந்தையைப் பெறுவதற்காக எங்கள் நிறுவனங்கள் எங்கு உற்பத்தி செய்ய வேண்டும் என்பதை வேறு எவரும் தீர்மானிப்பதை கியூபெக் அனுமதிக்காது.
எங்கள் நிறுவனங்களையும் தொழிலாளர்களையும் உறுதியுடன் பாதுகாப்போம் என குறிப்பிட்டுள்ளார்.