மூலதன ஆதாய வரி நீக்கப்படும் - ஃப்ரீலேண்ட்
லிபரல் கட்சியின் தலைமை பதவிக்கு தம்மை நியமித்தால் மூலதன ஆதாய வரி நீக்கப்படும் என முன்னாள் அமைச்சர் கிறிஸ்டியா ஃப்ரீ லேண்ட் தெரிவித்துள்ளார்.
பிரதமர் ஜஸ்டின் டரூடோ லிபரல் கட்சியின் தலைமை பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இதன் படி லிபரல் கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்பவர் பிரதமராகவும் பதவி வகிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
பொது தேர்தல் நடத்தப்படும் வரையில் லிபரல் கட்சியின் தலைவர் பிரதமராக பதவி வகிக்க உள்ளார்.
இந்த நிலையில் தமக்கு கட்சியின் தலைமை பொறுப்பு வழங்கப்பட்டால் மூலதன ஆதாய வரியை ரத்து செய்வதாக ஃப்ரீ லேண்ட் தெரிவித்துள்ளார்.
நிதி அமைச்சராக கடமை ஆற்றிய காலத்தில் மூலதன ஆதாய வரி அத்தியாவசியமானது என ஃப்ரீலேண்ட் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ட்ரூடோவின் அரசாங்கத்தில் ப்ரீலேண்ட் நிதி அமைச்சராக கடமை ஆற்றியிருந்தார்.
கனடிய மக்களின் முதலீடுகளை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த வரியை ரத்து செய்வதாக அவர் தெரிவித்துள்ளார்.