கனடாவில் தொடரும் சீரற்ற வானிலை
கனடாவை தொடர்ந்து தாக்கும் கடுமையான குளிர்கால வானிலை தொர்ந்தும் நீடிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அண்மையில் ஒன்டாரியோ மற்றும் கியுபெக் மாகாணங்களை கடுமையாக தாக்கிய பனிப் புயல் காரணமாக, சாலைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பத்தாயிரக்கணக்கான மக்கள் மின்சாரமின்றி தவித்து வருகின்றனர்.
கிழக்கு ஒன்டாரியோ முதல் அட்லாண்டிக் பிராந்தியம் வரை பரவிய பல மாகாணங்களில் மஞ்சள் மற்றும் ஆரஞ்சு வானிலை எச்சரிக்கைகள் தொடர்கின்றன.

மில்லியன்கணக்கான மக்கள் சீரற்ற காலநிலை பாதிப்பினால் நெருக்கடிகளை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஒன்டாரியோ மற்றும் கியுபெக்கில், உறைமழை, பனிக்காற்று மற்றும் பலத்த காற்று காரணமாக ஒரு கட்டத்தில் பத்தாயிரக்கணக்கான வீடுகள் மின்சாரம் இன்றி இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த ஒரு வாரமாக, கனடாவின் பல பகுதிகளில் பனிப்புயல், கடும் குளிர் அலை, உறைமழை என தொடர் வானிலை தாக்குதல்களை சந்தித்து வருகிறது.
பிரிட்டிஷ் கொலம்பியா (B.C.) மாநிலத்தின் ஹைடா குவாய் (Haida Gwaii) பகுதியில், அதிக மழை காரணமாக Highway 16 சாலையின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளது. இதனால், தீவின் வடக்கு – தெற்கு பகுதிகளை இணைக்கும் முக்கிய பாதை துண்டிக்கப்பட்டுள்ளது.