பிரித்தானியாவை அச்சுறுத்தும் உறைபனி; 1000 பாடசாலைகளுக்கு பூட்டு!
பிரித்தானியாவை அச்சுறுத்தும் உறைபனி காரணமாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக பிரித்தானிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெப்பமூட்டும் கருவிகளில் ஏற்பட்ட கோளாறு மற்றும் போக்குவரத்துச் சிக்கல்கள் காரணமாகப் பாடசாலைகளை மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. வேல்ஸில் (Wales) மற்ற பகுதிகளை விட பாதிப்பு மிக அதிகம்.

ரயில் மற்றும் பேருந்து போக்குவரத்துகளிலும் தாமதங்கள்
இன்று மட்டும் 380-க்கும் மேற்பட்ட பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. வடக்கு அயர்லாந்து (Northern Ireland) சுமார் 186 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்காட்லாந்து (ஸ்காட்லாந்து அபெர்டீன்ஷயர் (Aberdeenshire) பகுதியில் மட்டும் 150-க்கும் அதிகமான பாடசாலைகள் இயங்கவில்லை. இவை மட்டுமல்லாது இங்கிலாந்தின் முக்கிய பகுதிகளிலும் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.
அதன்படி, ஸ்டாஃபோர்ட்ஷயர் (Staffordshire)இல் 85-க்கும் மேற்பட்ட பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. வடக்கு ஜோக்க்ஷயர் (North Yorkshire) 45 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.

நோர்ஃபோக் & சஃபோக் (Norfolk & Suffolk)இலும் சுமார் 25 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.
எசெக்ஸ் & ஆக்ஸ்போர்டுஷயரிலும் இங்கு பனிப்பொழிவு மட்டுமின்றி, பாடசாலைகளில் உள்ள பாய்லர்கள் (Boilers) மற்றும் ஹீட்டிங் சிஸ்டம் பழுதடைந்த காரணத்தினாலும் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.
மேலும் வானிலை ஆய்வு மையம் பல பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கை (Yellow Warning) விடுத்துள்ளது. பனிப்பொழிவு காரணமாக சாலைகளில் வழுக்கும் தன்மை அதிகமாக இருக்கும் என்பதால் வாகன ஓட்டிகள் கவனமாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அதேவேளை ரயில் மற்றும் பேருந்து போக்குவரத்துகளிலும் தாமதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.