இரண்டாம் உலகப் போரில் பங்கேற்ற கனேடியர்கள்... கனடாவில் தேடும் பிரெஞ்சு தூதரகம்
இரண்டாம் உலகப் போரில் பங்கேற்ற கனேடிய வீரர்களை ஆதரிக்கும் பொருட்டு கனடாவில் உள்ள பிரெஞ்சு தூதரகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
கடந்த 2014ல் 70வது D-Day கொண்டாடப்பட்ட நிலையில் பிரான்ஸ் அரசாங்கம் புதிய பிரச்சாரம் ஒன்றை முன்னெடுத்தது.
இதில், இரண்டாம் உலகப் போரில் கலந்துகொண்ட கனேடிய வீரர்களுக்கு உயரிய விருதினை வழங்கவும் முடிவு செய்யப்பட்டது. Legion of Honour என அறியப்படும் குறித்த விருதானது 1802ல் நெப்போலியன் போனபார்ட்டால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை, கனடாவில் மட்டும் 1,148 ஆண்களுக்கும் 6 பெண்களுக்கும் குறித்த விருதானது அளிக்கப்பட்டுள்ளது.
ஆல்பர்ட்டா மாகாணத்தில் மட்டும் 91 பேர்கள் குறித்த விருதினை பெற்றுள்ளனர்.
இரண்டாம் உலகப் போரில் பங்கேற்ற கனேடியர்களின் நெருங்கிய உறவினர்களுக்கும் குறித்த விருது பெறும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.