கடுமையான குளிர் காலம்... அடுத்த சிக்கலில் தள்ளப்படும் பிரான்ஸ் மக்கள்
பிரான்ஸில் அணுமின் நிலையத்தில் பராமரிப்பு வேலைகள் முழுமையடையாத நிலையில், கடுமையான குளிர் வீசுவதால் மின் பற்றாக்குறை ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அணுமின் நிலையமூடாக இந்த வாரத்தில் மட்டும் 40GW மின்சாரம் விநியோகிக்கப் பட வேண்டும். ஆனால் பராமரிப்பு வேலைகள் காரணமாக அதில் 5GW அளவுக்கு மின்சாரம் பற்றாக்குறை ஏற்படும் என கூறப்படுகிறது.
இதனிடையே, இந்த வாரம் மற்றும் அடுத்த வாரம் வடமேற்கு ஐரோப்பா கடும் குளிரால் தத்தளிக்க இருக்கிறது என தகவல் வெளியாகியுள்ளது. இந்த சூழலில் மின் தேவையும் அதிகரிக்கும் எனவும், ஆனால் அதை எதிர்கொள்ள நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.
75GW மின்சாரம் தேவை என்ற நிலையில், தற்போது 30GW அளவுக்கு மட்டுமே அணுமின் நிலையத்தில் இருந்து தயாரிக்க முடிகிறது என்பது மிகவும் குறைவு என குறிப்பிட்டுள்ளனர்.
இதனால் பிரான்சில் முக்கிய பகுதிகளில் அடுத்த வாரம் மின்வெட்டு எதிர்பார்க்கலாம் என கூறுகின்றனர்.