ரத்தன் டாடா மறைவுக்கு பிரான்ஸ் ஜனாதிபதியின் உருக்கமான இரங்கல் பதிவு!
இந்தியாவின் பிரபல தொழிலதிபரும், டாடா குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா, உடல்நலக்குறைவால் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார்.
ரத்தன் டாடாவின் மறைவுக்கு பல்வேறு நாட்டு தலைவர்கள், உப்பட பிரபலங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
இவ்வாறான நிலையில், ரத்தன் டாடாவின் மறைவால் ஒரு நல்ல நண்பரை பிரான்ஸ் இழந்துவிட்டது என அந்நாட்டு ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது,
"ஒரு நல்ல நண்பரை பிரான்ஸ் இழந்துவிட்டது. இந்தியா மற்றும் பிரான்ஸில், புத்தாக்கம் மற்றும் உற்பத்தித் துறைகளில் ரத்தன் டாடாவின் தொலைநோக்குப் பார்வையால் தொழில்கள் மேம்பட்டன.
President @EmmanuelMacron's condolence message on the demise of Shri #RatanTata:
— French Embassy in India ???? (@FranceinIndia) October 10, 2024
Read➜ https://t.co/tBFGlDVOWI pic.twitter.com/OEVZ6FsTTe
அதையும் தாண்டி, அவரது மனிதநேய பார்வை, மகத்தான தொண்டு மற்றும் அவரது பணிவு ஆகியவற்றால் ரத்தன் டாடா நினைவுகூறப்படுவார்.
அவருக்கு நெருக்கமானவர்களுக்கும், இந்திய மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்." என அவர் பதிவிட்டுள்ளார்.