நெதன்யாகுவை சந்திக்க இஸ்ரேல் சென்ற அதிபர் மேக்ரான்!
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கை தொடர்ந்து இன்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் இஸ்ரேல் சென்றுள்ளார்.
இஸ்ரேல்- ஹமாஸ் போர்
பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலின் மீது 5000க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை ஏவி தாக்குதலை தொடங்கினர்.
இதையடுத்து உடனடியாக அவசர நிலை பிறப்பிக்கப்பட்டு, போர் பிரகடனத்தை இஸ்ரேல் அறிவித்தது.
ஹமாஸ் அமைப்பினர் பதுங்கி இருந்து செயல்படும் இடம் என தெரிவித்து பாலஸ்தீனத்தின் காசா பகுதி மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை நடத்தியது. இதன்போது இஸ்ரேலிய ராக்கெட்டுகளால் காசா நகரம் முழுவதும் சூறையாடப்பட்டது.
மேலும், நேற்றைய 17 வது நாள் தாக்குதலுக்குப் பிறகு இருதரப்பிலும் பலி எண்ணிக்கை 6 ஆயிரத்து 500-ஐ கடந்துள்ளது.
இந்நிலையில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் இஸ்ரேல் சென்றுள்ளார்.
இஸ்ரேல் சென்ற பிரான்ஸ் அதிபர்
இஸ்ரேலுக்கும் ஹமாஸ் இயக்கத்துக்கும் இடையிலான மோதல்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் இந்த உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
இந்த பயணத்தின் போது, இஸ்ரேல் ஜனாதிபதி மற்றும் பாலஸ்தீன தலைவர்களையும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் சந்தித்து பேசவுள்ளதாக அவரது ஆலோசகர்கள் தெரிவித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |