ஒழுக்கக்கேடான போர் நடவடிக்கைகள்..ரஷ்யாவுக்கு கண்டனம் தெரிவித்த பிரான்ஸ் அதிபர் மக்ரோன்
உக்ரைன் மருத்துவமனைகள் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலுக்கு பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் கண்டனம் தெரிவித்துள்ளார். உக்ரைனில் உள்ள மருத்துவமனை மீது ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தின.
இந்த நடவடிக்கைக்கு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் கண்டனம் தெரிவித்துள்ளார். உக்ரைனின் தென்கிழக்கு நகரமான மரியுபோல் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றின் முன் மதியம் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. ரஷ்யப் படைகள் நடத்திய தாக்குதலில் ஒரு சிறுமி உட்பட 3 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். ரஷ்ய தாக்குதலுக்கு மக்ரோன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
"மருத்துவமனை தாக்குதல்கள் - தகுதியற்ற மற்றும் ஒழுக்கக்கேடான போர் நடவடிக்கைகள்" என்று மக்ரோன் கூறினார். "இந்த புகைப்படங்கள் எல்லோரையும் போலவே என்னையும் பாதித்தன. இந்த குண்டுவெடிப்பின் வெளிப்படையான நோக்கம் பொதுமக்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளைக் கொல்வதாகும். ரஷ்ய துருப்புக்கள் இந்த போரின் தொடக்கத்தில் இருந்து பல முறை இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளன!" என்று மக்ரோன் கூறினார்.
வியாழன் அன்று ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டில் மக்ரோன் அறிக்கைகளை வெளியிட்டார்.