பிரான்ஸ் ஜனாதிபதி மெக்ரோன் கன்னத்தில் அறைந்த மனைவி!
பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதியான இமானுவேல் மேக்ரான் தற்போது தென்கிழக்கு ஆசிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
இமானுவேல் மேக்ரானுடன் அவரது மனைவி பிரிஜிட் மேக்ரான் உடன் சென்றுள்ளார். தற்போது இமானுவேல் மேக்ரான் வியட்நாமில் உள்ளார். நேற்றைய தினம் வியட்நாமுக்கு அவர் வந்திறங்கினார்.
வைரலான வீடியோ
இந்நிலையில் இமானுவேல் மேக்ரான் வீடியோ ஒன்று இணையதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது இமானுவேல் மேக்ரான் தனது மனைவி பிரிஜிட் மேக்ரானுடன் சிறப்பு விமானத்தில் வியட்நாமுக்கு சென்றார்.
வியட்நாம் தலைநகர் ஹனோயில் விமானம் தரையிறங்கியது. அப்போது இமானுவேல் மேக்ரானின் விமானத்தின் கதவு திறந்தது. உள்ளே இருந்து மனைவி பிரிஜிட் மேக்ரானுடன், இமானுவேல் மேக்ரான் வெளியே வர தயாராகி இருந்தார்.
அப்போது திடீரென இமானுவேல் மேக்ரானின் கன்னத்தில் அவரது மனைவி பிரிஜிட் மேக்ரான் அறைவது போல உள்ளது. மனைவி பிரிஜிட் மேக்ரானின் முகம் வீடியோவில் தெரியவில்லை.
விமானத்தில் கதவுகள் அதனை மறைத்துள்ள நிலையில் அவரது கை ஆக்ரோஷமாக இமானுவேல் மேக்ரானின் கன்னத்தில் அறைவது போல் அந்த வீடியோ உள்ளது.