புடினை கோபப்படுத்தும் பிரான்ஸ் அதிபர்!
உக்ரைன் உடனான போரில் ரஷ்யாவை வெற்றிபெற அனுமதிக்கமுடியாது என பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான் (Emmanuel Macron)தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மாளிகையில் பிரெஞ்சு தூதர்களிடையே உரையாற்றியபோது அதிபர் மேக்ரான் (Emmanuel Macron) இவ்வாறு குறிப்பிட்டார்.

அதாவது, உக்ரைனுக்கு தொடர்ந்து மனிதநேய, பொருளாதார மற்றும் இராணுவ உதவிகளை வழங்குவதன் மூலம், ஐரோப்பாவின் ஒற்றுமையை வலுவூட்டி, அதன் மூலம் ரஷ்யாவுக்கு அழுத்தம் ஏற்படுத்தி, அது உக்ரைனை வெல்வதிலிருந்து ரஷ்யாவைத் தடுக்கவேண்டும் எனவும் மேக்ரான் (Emmanuel Macron) தெரிவித்தார்.
இந்த ஒன்றில் உக்ரைன் போரில் வெற்றிபெற உதவவேண்டும், அல்லது, உக்ரைனிடம் சமாதானப் பேச்சுக்கு வரும்வகையில் அதை வலிமையான நிலையில் வைக்கவேண்டும் என பிரான்ஸ் அதிபர் (Emmanuel Macron)குறிப்பிட்டார் .

ஒரு நீண்ட யுத்தத்துக்கு நாம் தயாராக இருக்கவேண்டும் என்று கூறியுள்ள மேக்ரான், உக்ரைனிலுள்ள அணு உலைகள் குறித்த விடயம், பிரச்சினையை பெரிதாக்கலாம் எனவும் கூறினார்.
அத்துடன், மற்ற நாடுகள் தன்னை விமர்சித்தாலும் சரி, தான் தொடர்ந்து ரஷ்ய ஜனாதிபதியான புடினுடன் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக தெரிவித்த மேக்ரான், முடிந்தவரை சமாதானப் பேச்சுவார்த்தை நடப்பதற்காக அனைத்தையும் செய்யவேண்டும் எனவும் (Emmanuel Macron) வலியுறுத்தினார்.