உச்ச தலைவர் கமேனியின் இறுதிச்சடங்கு...அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எச்சரிக்கை!
ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அலி கமேனியின் இறுதிச் சடங்கு வருகிற 4ம் தேதி முதல் 9ம் தேதி வரை ஈரானில் நடைபெறவிருக்கிறது. இதையடுத்து டெஹ்ரான், மஹ்மத் உள்ளிட்ட நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன.
தற்காலிக வான்வெளி கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் கமேனியின் இறுதிச் சடங்கு நடைபெறும் 4ம் தேதி முதல் 9ம் தேதி வரை தங்கள் மீது ராணுவ தாக்குதல் நடத்தினால் கடும் பதிலடி கொடுக்கப்படும் என அமெரிக்கா மற்றும் இஸ்ரேலை ஈரான் ராணுவம் எச்சரித்திருக்கிறது.

தாக்குதல் நடத்தினால் கடும் பதிலடி
ஈரான் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்வது அமெரிக்காவுக்கும், இஸ்ரேலுக்கும் பிடிக்கவில்லை, இதையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் 28ம் தேதி ஈரான் நாட்டின் மீது இரண்டு நாடுகளும் போர் தொடுத்தன.
போர்த் தொடங்கி அடுத்தநாளே இஸ்ரேல் தாக்கியதில் ஈரானின் உச்ச தலைவர் அலி கமேனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார். அவரின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் சுமார் 19 பேர் அந்த குண்டு வீச்சில் பலியானதாக சொல்லப்பட்டது.
அதன் பின் கமேனியின் மகன் மொஜ்தபா கமேனி ஈரானின் உச்ச தலைவராக அறிவிக்கப்பட்டார். ஆனால் அவரும் இஸ்ரேல் தாக்கியதில் காலில் அடிபட்டு படுத்த படுக்கையாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதேவேளை உச்ச தலைவர் அலி கமேனியின் உயிர்ழந்து நாகு மாதங்களின் பின்னர் இறுதிச்சடங்கு நடைபெறாவுள்ளமை குறிப்பிடத்தக்கது.