பிரான்ஸில் இரு பொலிஸாரை சுட்டுகொன்று கைதியை கடத்திச்சென்ற கும்பல்! பரபரப்பு சம்பவம்
பிரான்ஸின் இன்கார்வில்லே பகுதியில் உள்ள சுங்கச்சாவடியில் நின்றிருந்த சிறைச்சாலை வேன் மீது கும்பல் ஒன்று தாக்குதல் நடத்திவிட்டு கைதியை கடத்திச் சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரபப்பை ஏற்படுத்தியுள்ளது.
வடக்கு பிரான்ஸின் இன்கார்வில்லே பகுதியில் உள்ள சுங்கச்சாவடியில் நின்றது. அப்போது அங்கு கார்களில் கும்பல் ஒன்று வந்தது. அவர்கள் சிறைத்துறை வேன் மீது தங்களது வாகனத்தை மீதியுள்ளனர்.
முகமுடி அணிந்திருந்த அந்த கும்பலை சேர்ந்தவர்கள், பொலிஸார் மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இந்ந தாக்குதலில் 2 பொலிஸார் உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவம் பிரான்ஸில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
முகமது அம்ரா மற்றும் அவரை மீட்டு சென்ற கும்பலை பொலிஸார் தீவிரமாக தேடி வருகிறார்கள். இதில் நூற்றுக்கணக்கான பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பில் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரான் கூறும்போது,
"குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன" என்றார்.
Occured today in #France. Members of a gang attacked a prison transport van that was carrying their leader, an Algerian thief and drug dealer, Mohammed Amra known as 'The Fly'. They escaped with their leader after killing three prison guards. As it can be seen in this CCTV… pic.twitter.com/vNR6zJy1oI
— Babak Taghvaee - The Crisis Watch (@BabakTaghvaee1) May 14, 2024