பில்கேட்ஸை தட்டித்தூக்கிய கௌதம் அதானி!
ஃபோர்ப்ஸ் சஞ்சிகையின் ரியல் டைம் பில்லியனர்கள் பட்டியலில், இந்திய தொழிலதிபர் கௌதம் அதானி (Gautam Adani) , மைக்ரோசொஃப்ட் நிறுவுனர் பில்கேட்ஸைப் (Bill Gates) பின்தள்ளி உலகின் நான்காவது மிகப்பெரிய செல்வந்தராக மாறியுள்ளார்.
60 வயதான அதானியின் (Gautam Adani) நிகர சொத்து மதிப்பு இன்றைய திகதியில் 115.5 பில்லியன் அமெரிக்க டொலரை எட்டியது. பில்கேட்ஸின் (Bill Gates) நிகர சொத்து மதிப்பு 104.6 பில்லியன் அமெரிக்க டொலராக காணப்படுகிறது.
அதேசமயம் முகேஷ் அம்பானி (Mukesh A mbani) இந்தப் பட்டியலில் 10 ஆவது இடத்தில் உள்ளார்.
அவரது சொத்து மதிப்பு 90 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.
இதேவேளை, டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவுனர் எலோன் மஸ்க் (Elon Musk) , 235.8 பில்லியன் டொலர்களுடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.