போர் நிறுத்தத்தை தொடர்ந்து வீடுகளுக்கு திரும்பும் காசா மக்கள்
போர் நிறுத்ததை தொடர்ந்து போரினால் இருப்பிடத்தை இழந்த ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் மீண்டும் வீடுகளுக்குத் திரும்புகின்றனர்.
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான அமைதி ஒப்பந்தத்தின் முதற்கட்ட உடன்பாடு நடப்புக்கு வந்துள்ளது.
அது பல பாலஸ்தீனர்களுக்கு ஆறுதல் அளித்திருக்கிறது. அதே சமயம் அடுத்து என்ன நடக்கும் எனும் கவலையும் எழுந்துள்ளது.
நேற்று முன்தினம் (9 அக்டோபர்) திரு டிரம்ப் இஸ்ரேலும் ஹமாஸும் அமைதி உடன்பாட்டை எட்டியிருப்பதை அறிவித்தார். ஈராண்டாக நீடிக்கும் காஸா போர் விரைவில் முடிவுக்கு வரும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
2023ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் திகதி ஹமாஸ் இஸ்ரேலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதை அடுத்து இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் போர் வெடித்தமை குறிப்பிடத்தக்கது.