செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தும் கனேடியர்களுக்கு எச்சரிக்கை!
கனடாவில் செயற்கை நுண்ணறிவு பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு அதிகளவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் போது சில முக்கியமான தகவல்கள் கசியக்கூடிய சாத்தியங்கள் உண்டு என தெரிவிக்கப்படுகின்றது.
பணிகளிலும், பாடசாலைகளிலும் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துவதாக கருத்துக் கணிப்பில் பங்கேற்ற 20 வீதமானவர்கள் தெரிவித்துள்ளனர்.
சுமார் ஐயாயிரத்திற்கும் மேற்பட்டவர்களிடம் இந்தக் கருத்துக் கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துவதன் மூலம் பணியின் தரம் மற்றும் வினைத்திறன் அதிகரிப்பதாக கருத்துக் கணிப்பில் பங்கேற்றவர்கள் தெரிவிக்கின்றனர்.
வாடிக்கையாளர் ஒப்பந்தங்கள் உள்ளிட்ட இரகசியத்தன்மை பாதுகாக்கப்பட வேண்டிய தகவல்களை செயற்கை நுண்ணறிவுடன் பகிர்ந்து கொள்வது ஆபத்தானது என தெரிவிக்கின்றனர்.
ஏனெனில், இரகசிய தகவல்கள் கசியக்கூடிய சாத்தியங்கள் உண்டு என சுட்டிக்காட்டியுள்ளனர்.