ஜெர்மனி சான்ஸ்லரின் மனைவியின் அதிரடி முடிவு!
ஜெர்மனி சான்ஸ்லரின் மனைவி தமது மாநில கல்வி அமைச்சு பதவியை தற்பொழுது ராஜினாமா செய்து இருக்கின்றார்.
ஜெர்மனி சான்ஸ்லர் ஒலா சொஸ் அவர்களின் மனைவி பிரிட்டா என்பவர் பிரண்டன்பேர்க் மாநில கல்வி அமைச்சராக கடமையாற்றி இருந்தார்.
நேற்றைய தினம் ஏப்ரல் 19 ஆம் திகதி திடீரென தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்து இருக்கின்றார்.
இந்நிலையில் பிரிட்டா அவர்கள் கடந்த சில நாட்களாக பல கொள்ளைகளை முன்வைத்துள்ளார். மேலும் அவரது கொள்கைக்கு எதிராக கட்சி உறுப்பினர்கள் பல கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.
அதனால் கட்சிகளுக்கிடையே பாரிய விரிசல் ஏற்பட்டிருந்ததாகவும் தெரிய வந்திருக்கின்றது. இவரது கொள்கைக்கு கட்சிகளிடையே போதுமான அளவு ஆதரவு கிடைக்க வில்லை என தெரியவந்திருக்கின்றது.
மேலும் கட்சி உறிப்பினரிடையே போதுமான ஆதரவு இல்லாத காரணத்தினால் இவர் இவ்வகையான திடீர் முடிவை எடுத்துள்ளதாக தெரியவந்திருக்கின்றது.