ஜேர்மனி - பெல்ஜியத்தில் கனமழை...உயிரிழந்தோர் எண்ணிக்கை 168 ஆக உயர்வு!

Praveen
Report this article
மேற்கு ஐரோப்பாவின் சில பகுதிகளில், இரண்டு மாதங்களில் பெய்ய வேண்டிய மொத்த மழையும் இரண்டே நாட்களில் பெய்துள்ளன. இதன் காரணமாக பல நாடுகளிலும் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது கனமழை காரணமாக, பல்வேறு பகுதிகளில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
வெள்ள நீரில் முழ்கியும் கட்டடங்கள் இடிந்து விழுந்தும் உயிரிந்தவா்களின் எண்ணிக்கை 168-ஐத் தாண்டியுள்ளது. இன்னும், காணாமல் போன நூற்றுக்கணக்கானோரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சாலைகள் சேதமடைந்துள்ளதாலும் தகவல் தொடா்புகள் துண்டிக்கப்பட்டதாலும் அவா்களைத் தொடா்பு கொள்ள முடியாத நிலை உள்ளதாக அதிகாரிகள் கூறினா்.
ஜேர்மனியில் சுமார் 15,000 போலீஸார், ராணுவ வீரர்கள் மற்றும் அவசர நிலை பணியாளர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். பெல்ஜியத்தில் குறைந்தது 27 பேர் இறந்துள்ளனர். நெதர்லாந்து, லக்சம்பர்க், ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன.