கனடாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள ஜேர்மன் தலைவர்
ட்ரம்பால் வறுத்தெடுக்கப்படும் கனடாவுக்கு ஆதரவாக ஜேர்மனியிலிருந்து ஒருவர் குரல் கொடுத்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், கனடாவை அமெரிக்காவின் 51ஆவது மாகாணமாக ஆக்கப்போவதாக தொடர்ந்து மிரட்டிவரும் நிலையில், ஜேர்மன் சேன்ஸலரான ஓலாஃப் ஷோல்ஸ், கனடாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்.
கனடா எந்த நாட்டின் மாகாணமும் அல்ல என்று கூறியுள்ள ஷோல்ஸ், கனடா பெருமை மிக்க ஒரு சுதந்திர நாடு என்றும் கூறியுள்ளார்.
கனடாவுக்கு உலகம் முழுவதும் நண்பர்கள் இருக்கிறார்கள் என்று கூறியுள்ள ஷோல்ஸ், குறிப்பாக, ஜேர்மனியிலும் அமெரிக்காவிலும் கனடாவுக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள் என்றும் கூறியுள்ளார்.
ட்ரம்ப் நிர்வாகத்தின் ஐரோப்பா மீதான வரி விதிப்பு திட்டங்கள் குறித்து விமர்சித்த ஷோல்ஸ், அப்படி அமெரிக்கா வரிகள் விதிக்குமானால், அது பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கே வழிவகுக்கும் என்றும், அதனால் இருதரப்புக்கும் பாதிப்புகள் ஏற்படும் என்றும் எச்சரித்துள்ளார்.