அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டால் ஜெர்மனி ஒத்துழைக்கும்
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டால், ஹார்முஸ் நீரிணையின் பாதுகாப்பை உறுதி செய்யும் முயற்சிகளில் ஜெர்மனியும் இணைந்து கொள்ளும் என ஜெர்மன் அதிபர் ஃபிரீட்ரிக் மெர்ஸ் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்து குறித்துப் பேசிய மெர்ஸ், "முழு நாகரிகத்தையும் அழிப்பது டிரம்பின் நோக்கம் அல்ல என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்" என்று குறிப்பிட்டார்.
மேலும், சில நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டால் மட்டுமே கடல்சார் பாதுகாப்பில் ஜெர்மனி ஈடுபடும் என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார்.

நீண்ட கால மௌனத்திற்குப் பிறகு, ஈரான் தலைமையுடன் ஜெர்மனி நேரடிப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியுள்ளது.
நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு, இப்போது ஒரு அரசாங்கமாக ஈரானுடன் மீண்டும் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியுள்ளோம்.
இந்தப் பேச்சுவார்த்தைகள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நட்பு நாடுகளுடன் ஒருங்கிணைந்து நடத்தப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
லெபனானில் இஸ்ரேல் தொடர்ந்து நடத்தி வரும் ராணுவ நடவடிக்கைகள் மிகுந்த கவலையளிப்பதாக மெர்ஸ் தெரிவித்துள்ளார்.
இது ஒட்டுமொத்த அமைதிப் பேச்சுவார்த்தையையும் தோல்வியடையச் செய்யலாம் என்றும், அதை அனுமதிக்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
மத்திய கிழக்கில் நிலவும் பதற்றத்தைத் தணிக்கவும், கடல்சார் வணிகப் பாதைகளைப் பாதுகாக்கவும் ஜெர்மனி இந்த அதிரடி முடிவுகளை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.