ஜேர்மனியின் அதிதீவிரவலதுசாரி கட்சி; எலொன் மஸ்க்!
கோடீஸ்வரரும் எக்ஸ் தள உரிமையாளருமான எலொன் மஸ்க், ஜேர்மனியின் அதிதீவிரவலதுசாரி கட்சிக்கு ஆதரவளித்துள்ளமை ஐரோப்பிய அரசியலில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
ஜேர்மனியின் வாரஇறுதி பத்திரிகையில் எழுதிய கட்டுரையில் ஜேர்மனியின் அதிதீவிரவலதுசாரி கட்சியான ஜேர்மனியின் மாற்றீடு கட்சிக்கு எலொன் மஸ்க் தனது ஆதரவினை வெளியிட்டுள்ளார்.
ஜேர்மனிக்கான இறுதி நம்பிக்கை ஜேர்மனியின் ஏஎவ்டி கட்சியே என எழுதியுள்ள எலொன் மஸ்க், ஜேர்மனி பொருளாதார கலாச்சார வீழ்ச்சியின் விளிம்பில் தத்தளிக்கின்றது.
இது குடிவரவை கட்டுப்படுத்தும் கொள்கை மூலமே ஜேர்மனியால் தனது பொருளாதாரத்தை மீளகட்டியெழுப்ப முடியும்.
இதனால் ஜேர்மனி தனது தனித்துவ அடையாளத்தை இழக்கும் ஆபத்தை தவிர்க்க முடியும் என குறிப்பிட்டுள்ளார்.
ஏஎவ்டி கட்சியை தீவிரவாத கட்சி என வர்ணிப்பவர்கள் மற்றும் கண்டிப்பவர்களுக்கு நான் ஒன்றை சொல்ல விரும்புகின்றேன் அந்த கட்சி குறித்து தெரிவிக்கப்படும் விடயங்களால் நீங்கள் அந்த கட்சி குறித்த ஆர்வத்தை இழக்க கூடாது. ஏஎவ்டி கட்சி தீவிரவலதுசாரி கட்சி என்பது முற்றிலும் தவறான கருத்து என எலொன்மஸ்க் தெரிவித்துள்ளார்.
மேலும், ஏஎவ்டி கட்சி வரிகள் பொருளாதாரத்தின் மீதான கட்டுப்பாடுகளை நீக்குவது போன்ற விடயங்களில் பின்பற்றும் கொள்கையை எலொன் மஸ்க் பாராட்டியுள்ளார்.
எலொன் மஸ்க்கின் இந்த கட்டுரைக்கு ஜேர்மனியில் எதிர்வரும் 23ம் திகதி இடம்பெறவுள்ள தேர்தலில் சான்சிலர் பதவிக்கு போட்டியிடும் பிரைடிரிச் மேர்ஸ், எலொன் மஸ்க்கின் இந்த கட்டுரை ஊடுருவும் பாசாங்குதன்மை கொண்டது என கடுமையாக சாடியுள்ளார்.
மற்றும், இடது சாரி சமூக ஜனநாயக கட்சியின் தலைவர் லார்ஸ் கிளிங்பெய்ல், எலொன் மஸ்க் ஜேர்மனியை குழப்பத்தில் தள்ள விரும்புகின்றார் என தெரிவித்துள்ளதுடன் அவரை ரஷ்ய ஜனாதிபதி புதினுடன் ஒப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.