இத்தாலி பிரதமர் மெலோனி செய்த சாதனை
இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, அந்நாட்டின் போருக்கு பிந்தைய வரலாற்றில் தொடர்ந்து நீண்ட காலம் பிரதமராக பதவி வகித்தவர் என்ற புதிய சாதனையை படைத்துள்ளார்.
அவரது அரசு தொடர்ந்து 1,413 நாட்கள் பதவியில் இருந்து தொடர்ந்து நீண்ட காலம் பிரதமராக பதவி வகித்தவர் என்ற புதிய சாதனையை படைத்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
இத்தாலியில் அரசுகள் அடிக்கடி மாறி வந்த நிலையில், மெலோனியின் ஆட்சி அந்நாட்டுக்கு குறிப்பிடத்தக்க அரசியல் நிலைத்தன்மையை ஏற்படுத்தியுள்ளதாக பார்க்கப்படுகிறது. இந்த சாதனைக்காக மெலோனிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மெலோனியை தனது “நண்பர்” என்று குறிப்பிட்ட மோடி, இத்தாலி மக்கள் அவர் மீது வைத்துள்ள நம்பிக்கையையும் ஆதரவையும் இந்த சாதனை வெளிப்படுத்துவதாக கூறியுள்ளார்.

மேலும், இந்தியா–இத்தாலி சிறப்பு மூலோபாய கூட்டாண்மையை வலுப்படுத்துவதில் மெலோனியின் நட்பு முக்கிய பங்கு வகித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மோடி–மெலோனி சந்திப்புகள் சமூக வலைதளங்களிலும் அடிக்கடி கவனம் பெறுகின்றன. குறிப்பாக, இருவரது பெயர்களை இணைத்து உருவான “Melodi” என்ற வார்த்தை இணையத்தில் பிரபலமாகியுள்ளது.