அடுக்குமாடி குடியிருப்பின் ஜன்னலிலிருந்து விழுந்து 6 வயது சிறுமி பரிதாப மரணம்
டொராண்டோவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் ஜன்னலிலிருந்து கீழே விழுந்த 6 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை இரவு 8:15 மணியளவில், நார்த் யார்க்கில் உள்ள சாக்ஃபார்ம் டிரைவ் (Chalkfarm Drive) மற்றும் ஜேன் ஸ்ட்ரீட் (Jane Street) சந்திப்பிற்கு அருகில் உள்ள ஒரு கட்டிடத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
ஆரம்பத்தில் அப்பகுதியில் ஏதோ பிரச்சனை இருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற பொலிஸார், சிறுமி உயிரிழந்த நிலையில் கிடப்பதைக் கண்டறிந்தனர்.

முதற்கட்ட விசாரணையில், அந்தச் சிறுமி தனது படுக்கையறை ஜன்னலிலிருந்து தவறி விழுந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
உயிரிழந்த சிறுமிக்கு உடற்கூறாய்வு (Autopsy) செய்யப்பட உள்ளதாகவும், அதன் அறிக்கை வரும் வரை பொலிஸார் தொடர்ந்து அந்தப் பகுதியில் விசாரணை நடத்தி வருகின்றனர் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.