ஸ்கி லிப்ட் விபத்து: 13 வயது மாணவி உயிரிழப்பு
கனடாவின் வேக்பீல்ட் அருகிலுள்ள மலைப்பகுதியில் ஸ்கி லிப்ட் இயந்திரத்தில் உடை சிக்கி தீவிரமாக காயமடைந்த 13 வயது மாணவி உயிரிழந்துள்ளார்.
இந்த தகவலை அவரது குடும்பத்தினர் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தினர். இந்த செய்தியை பகிர வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பது எங்களுக்கு மிகுந்த துயரத்தை அளிக்கிறது என குடும்பம் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக எங்களுக்கு சமூகத்திலிருந்து கிடைத்த ஆதரவு மற்றும் அன்பிற்காக நன்றி தெரிவிக்கிறோம். இந்த துயரச் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் எங்கள் அன்பை தெரிவிக்கிறோம். எங்கள் அருமை மகளை காப்பாற்ற வீரத்துடன் செயல்பட்ட அனைவருக்கும் நன்றி என அவர்கள் கூறியுள்ளனர்.
கடந்த 11ஆம் திகதி, பள்ளி சுற்றுலா பயணமாக சென்றிருந்த மாணவி, மலை உச்சியில் உள்ள chairlift-இல் இருந்து இறங்க முயன்றபோது, அவரது உடை இயந்திரத்தில் சிக்கியது. அங்கு இருந்த பெரியவர்கள் அவரை விடுவிக்க முயன்றனர்.
இறுதியில், chairlift-ஐ மீண்டும் மலை அடிவாரத்துக்கு கொண்டு செல்வதே சிறந்த தீர்வு என முடிவு செய்யப்பட்டதாக மேற்கு கியூபெக் போலீசார் தெரிவித்தனர்.
மலை அடிவாரத்தை அடைந்தபோது, மாணவி சுவாசிக்கவில்லை என்று போலீசார் கூறினர்.
சம்பவ இடத்தில் இருந்த இரண்டு மருத்துவர்கள் மற்றும் அவசர உதவி குழுவினர் உடனடியாக CPR செய்தனர்.
பின்னர் அவர் முதலில் வேக்பீல்ட் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் சியோ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
எனினும் குறித்த மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் கனடா முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.