வயதில் மூத்த ஆணுடன் தவறான உறவை வைத்த சிறுமி! வெளியான அதிர்ச்சி பின்னணி
கயானாவில் தன்னை விட வயதில் மிகவும் மூத்த ஆண் ஒருவருடன் 14 வயது சிறுமி தவறான உறவில் இருந்ததை அறிந்த ஆசிரியர்கள், சிறுமியின் தொலைபேசியை பறித்துள்ளனர்.
14 வயதுள்ள சிறுமி தன்னை விட வயதில் மிகவும் மூத்த ஆண் ஒருவருடன்தவறான தொடர்பில் இருந்தது தெரியவந்ததால், மாணவியின் ஆசிரியர்களும், விடுதி பாதுகாப்பாளரும் சிறுமியை கண்டித்துள்ளனர்.
சிறுமியை தண்டிக்கும் வகையில், அவர்கள் அவளுடைய தொலைபேசியை பறித்துள்ளார்கள். கோபமடைந்த சிறுமி, இரவுவேளையில், தான் தங்கியிருந்த விடுதிக்கு தீ வைத்துள்ளார்.
அந்த நேரத்தில் ஹாஸ்டல் கதவுகள் பூட்டப்பட்டிருந்ததால், மாணவ மாணவிகள் தப்பியோடி வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தீப்பற்றி எரிந்த ஹாஸ்டலுக்குள் சிக்கி 19 மாணவ மாணவிகள் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில், அந்தப் பெண்ணைத் தண்டித்த ஹாஸ்டல் வார்டனான பெண்ணின் 5 வயது மகனும் ஒருவர்.
இந்த சம்பவம் கயானாவில் பெரும் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், தீவைத்த மாணவிக்கும் காயங்கள் ஏற்பட்டுள்ளதால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அந்த சிறுமி தன் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ள நிலையில், மாணவி குணமடைந்ததும் சிறுவர் சீர்திருத்தப் பாடசாலைஇல் அடைக்கப்பட்டுள்ளார்.
மேலும், அவளுடன் தொடர்பு வைத்திருந்த ஆண் மீதும், அவளை வன்புணர்ந்ததாக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட உள்ளது.
சிறுமி அவருடன் விரும்பியே உறவு வைத்துக்கொண்டாலும், சிறுமி 16 வயதுக்குக் குறைவான வயதுடைய சிறுமி என்பதால், அந்த ஆண் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.