இளம் காதலியை கொலை செய்துவிட்டு காதலன் தலைமறைவு - சடலமாக மீட்கப்பட்ட அம்பாறை பெண்
நுவரெலியா மாகஸ்தொட்ட பகுதியில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் இளம் பெண் ஒருவரைக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
அம்பாறைப் பகுதியை சேர்ந்த பியுமி திசானி என்ற 27 வயதுடைய இளம் பெண்ணே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
கடந்த 07ஆம் திகதி நுவரெலியாவை சேர்ந்த 27 வயதுடைய தனது காதலருடன் குறித்த இளம் பெண் குறித்த விடுதிக்கு சென்றுள்ளார்.
சடலமாக மீட்கப்பட்ட பெண்
அங்கு அவர்கள் பணம் செலுத்தி விடுதியை முன்பதிவு செய்து தங்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று காலை குறித்த இளம் பெண் விடுதியினுள் காயங்களுடன் வீழ்ந்து கிடப்பதைக் கண்ட விடுதியின் உரிமையாளர், நுவரெலியா பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
கிடைத்த தகவலின் அடிப்படையில் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. காதலன் அப்பகுதியிலிருந்து தப்பியோடியுள்ளார்.
பொலிஸ் விசாரணை
சந்தேக நபரை கைது செய்வதற்கான பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சடலம் தொடர்பில் நுவரெலியா நீதவானின் பரிசோதனைக்குப் பின்னர், பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது மருத்துவமனையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் சடலத்தை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.