ஊரடங்கில் காதலி வீட்டில் மாட்டிக்கொண்டதால் இங்கிலாந்தின் 113 வது பணக்காரரான நபர்; எப்படி தெரியுமா?
இங்கிலாந்தைச் சேர்ந்தவர் ஜானி பவ்பார்ஹேட், இவர் ஒரு ஐடி ஊழியராக இருந்து வருகிறார். இந்நிலையில் கொரோனா ஊரடங்கு நேரத்தில் அவர் தன் காதலியின் வீட்டில் மாட்டிக்கொண்டார்.
அப்பொழுதுஅவர் சும்மா இருக்காமல் தன் காதலியின் வீட்டின் அவரது பெட்டில் படுத்துக்கொண்டு ஒரு ஆப்பை டிசைன் செய்து அதற்கான கோடிங்கை எழுதினார். அத்துடன் அந்த ஆப்பிற்கு அவர் ஹோபின் என பெயரிட்டார்.
இந்த ஆப் குறித்து அவர் 2018ம் ஆண்டே திட்டமிட்டிருந்த நிலையில் அதை செய்ய நேரம் கிடைக்காமல் இருந்து வந்தார். இந்நிலையில் அவருக்கு ஊரடங்கு நேரம் கைகொடுத்ததால் அவர் அந்த ஆப்பை டிசைன் செய்து வெற்றிகரமாக முடித்தார் .
அந்த ஆப்பை அவர் ரிலீஸ் செய்த நிலையில் அதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு கிடைத்தது. அதோடு தற்போது இந்த ஆப்பை சுமார் 50 லட்சம் பேர் பயன்படுத்த தொடங்கிவிட்டனர்.
மேலும் இந்த ஆப்பின் மதிப்பு 4 டிரில்லியனுக்கும் அதிகமாக சென்றுவிட்டது. இந்நிலையில் ஜானி இங்கிலாந்து நாட்டின் 113 வது பணக்காரராக மாறிவிட்டார்.
ஜானி பவ்பார்ஹேட் சமீபத்தில் தனது நிறுவனத்தின் சில பங்குகளை விற்றது மூலம் சுமார் ரூ100 கோடி பெற்றுள்ளமை தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.