பிரான்ஸ் அருங்காட்சியகத்தில் களவுபோன தங்கம் மற்றும் வெள்ளி
வடகிழக்கு பிரான்சில் உள்ள மற்றுமொரு அருங்காட்சியகத்திலிருந்து 90,000 யூரோக்கள் (30 மில்லியன் ரூபாய்) மதிப்புள்ள சுமார் 2,000 தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் திருடப்பட்டுள்ளன.
பாரீஸில் (Paris)உள்ள உலகப் புகழ்பெற்ற லூவ்ரே அருங்காட்சியகத்திலிருந்து மதிப்புமிக்க நகைகள் திருடப்பட்டதைத் தொடர்ந்து இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தொடர்ச்சியான கொள்ளை சம்பவங்கள்
திருடப்பட்ட நாணயங்கள் 1790 மற்றும் 1840க்கு இடைப்பட்ட காலத்திலுள்ளவை ஆகும். செப்டெம்பர் மாத தொடக்கத்தில் இருந்து, பிரான்சிலுள்ள அருங்காட்சியகங்களில் தொடர்ச்சியான கொள்ளை சம்பவங்கள் நடந்துள்ளன.
குறிப்பாக நகைகள், நாணயங்கள் அல்லது அதிக வரலாற்று மதிப்புள்ள பொருட்கள் போன்ற மதிப்புமிக்க பொருட்களைக் குறிவைத்து நடத்தப்பட்டன.

இந்த சம்பவம் குறித்து பிரான்ஸ் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.