கனடாவில் இந்த வகை காளான் உட்கொள்வோருக்கு எச்சரிக்கை
கனடாவில் கோல்டன் களான் ( Golden Mushroom brand) எனப்படும் பண்டக்குரியை உடைய காளான் வகைகளை உட்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இனூக்கி ரக இந்த காளான் வகையில் லிஸ்ட்டீரியா எனப்படும் பாக்டீரியாக்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
200 கிராம் பாக்கெட்களில் இவ்வாறு நச்சுதன்மையுடைய பொருட்கள் கலந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒன்றரியோ மாகாணத்தில் இந்த வகை காளான்கள் விற்பனை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கனடிய உணவு பரிசோதனை முகவர் நிறுவனத்தின் உத்தரவிற்கமைய இந்த காளான் வகைகள் சந்தையிலிருந்து மீளப் பெற்றுக் கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறெனினும் இந்த காளான் வகைகளை உட்கொண்டு எவருக்கும் நோய்கள் ஏற்பட்டதாக இது வரையில் தகவல்கள் பதிவாகவில்லை.