Good Friday;ஆஸ்திரேலியாவில் இலவச எரிபொருள் விநியோகத்தால் போக்குவரத்து நெரிசல்
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உள்ள எரிபொருள் நிலையம் ஒன்றில், 100,000 டாலர் மதிப்பிலான எரிபொருள் இலவசமாக விநியோகிக்கப்பட்டுள்ளது.
நகரின் மேற்குப் பகுதியில் உள்ள ட்ருகானினா என்ற இடத்தில் அமைந்துள்ள 'லிபர்ட்டி' எரிபொருள் நிலையத்தில், ஒரு வெகுமதி வழங்கும் நிறுவனம் இந்த அதிரடி இலவசத் திட்டத்தை அறிவித்தது.

முற்றிலும் முடங்கிய போக்குவரத்து
இலவசமாக எரிபொருள் நிரப்பிக் கொள்ள டஜன் கணக்கான வாகனங்கள் அந்தப் பகுதியைச் சுற்றி அணிவகுத்து நின்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
குறித்த நிறுவனத்தின் நிறுவனர் பில்லி பீஸ்லி புனித வெள்ளியை (Good Friday) முன்னிட்டு இந்தச் சிறப்புச் சலுகையை அறிவித்திருந்தார்.
"முதலில் வருபவருக்கே முன்னுரிமை" என்ற அடிப்படையில் எரிபொருள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டதால், இன்று அதிகாலை முதலே 'லீக்ஸ் சாலை' பகுதியில் வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுத்து நின்றன. இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது.
பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டும், போக்குவரத்து நெரிசலைச் சீர்செய்யும் பொருட்டும், இந்த இலவச விநியோகத் திட்டத்தை உடனடியாக நிறுத்துமாறு காவல்துறையினர் நிறுவனத்திற்குப் பணித்தனர். இதனைத் தொடர்ந்து வாகன வரிசைகள் கலைக்கப்பட்டன.