ஆட்சி மாற்றத்தால் பல ஆண்டுகளின் பின்னர் இலங்கை தமிழ் குடும்பதிற்கு கிடைத்த நற்செய்தி!
ஆட்சி மாற்றத்தால் அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரி போராடிவந்த நடேஸ்- பிரியா குடும்பத்திற்கு குயின்ஸ்லாந்தின் பயோலாவிற்கு திரும்புவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதனை இடைக்கால உள்துறை அமைச்சர் ஜிம் சாமெர்ஸ் (Jim Chalmers ) அறிவித்துள்ளார். பிரிட்ஜிங் விசா வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் தெரிவிக்கையில், புகலிடச் சட்டத்தின் கீழ் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை தான் பயன்படுத்தியுள்ளதாகவும் தேர்தல் வாக்குறுதியின் படி பிரிட்ஜிங் விசா வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
When I visited Biloela in 2019, I saw just how much the community loves Priya, Nades, Kopika and Tharnicaa. Today my Government has enabled them to return home. #HometoBilo pic.twitter.com/PqYa59d1rD
— Anthony Albanese (@AlboMP) May 27, 2022
நடேஸ் பிரியா தம்பதியினர் ஒரு தசாப்தகாலத்திற்கு முன்னர் அகதிகளாக அவுஸ்திரேலியா சென்றனர் அவர்களது பிள்ளைகள் அவுஸ்திரேலியாவில் பிறந்தனர். அவர்களது தற்காலிக பாதுகாப்பு விசா முடிவிற்கு வந்த பின்னர் அவர்கள் தடுப்பில் உள்ளனர்.
இந்நிலையில் அவர்கள் சட்டபூர்வமாக சமூகத்தில் வசிப்பார்கள் என சால்மெர் தெரிவித்துள்ளார். அத்துடன் நான் அந்த குடும்பத்துடன் உரையாடியுள்ளதாக கூறிய அவர், அவர்களின் பயோலா வாழ்க்கை சிறப்பாக அமையவேண்டும் என வாழ்த்தியதாகவும் (Jim Chalmers )கூறினார்.
அதேவேளை இதனை என்னால் நம்பமுடியவில்லை என பிரியா முருகப்பன் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவிற்கு வரும் ஒவ்வொரு அகதியின் வாழ்க்கையும் அரசாங்கம் மாற்றவேண்டும் என்பதே எனது பிரார்த்தனை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அனைத்து அகதிகளும் உயிர்பிழைத்தவர்கள், அவர்களிற்கு நம்பிக்கை வேண்டும்,எனக்கு நடேசின் ஆதரவும் பயோலா மக்களின் ஆதரவும் கிடைத்தது ஆனால் ஏனைய பலருக்கு அந்த ஆதரவு இல்லை ஆகவே அவர்களிற்கும் ஆதரவளிக்கவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.