கனடாவில் பல்வேறு மருத்துவத்துறைப் பணியாளர்களுக்கு தட்டுப்பாடு
கனடாவில், குடும்ப நல மருத்துவர்கள் முதல், பல்வேறு மருத்துவத்துறைப் பணியாளர்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.
ஆகவே, அது தொடர்பான அறிவிப்பு ஒன்றை நேற்று பெடரல் அரசு வெளியிட்டுள்ளது.
(Nathan Denette/Canadian Press)
கனடாவில், குடும்ப நல மருத்துவர்கள் முதல், பல்வேறு மருத்துவத்துறைப் பணியாளர்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதைத் தொடர்ந்து, கனடாவின் புலம்பெயர்தல் அமைப்பைப் பயன்படுத்தி மருத்துவத்துறைப் பணியாளர்களைப் பணிக்கு எடுக்க இருப்பதாக பெடரல் அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தக ஊழியர்கள், பல் மருத்துவர்கள், பிஸியோதெரபிஸ்டுகள், கண் சிகிச்சை நிபுணர்கள் முதலானோருக்கு கனடாவில் தட்டுப்பாடு நிலவுகிறது.
குடும்ப நல மருத்துவர்களைப் பொருத்தவரை, ஆறு மில்லியன் கனேடியர்களுக்கு ஒரு குடும்ப நல மருத்துவர் இல்லை என ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
ஐந்து ஆண்டுகளில் மருத்துவர்கள் தட்டுப்பாடு இன்னும் மோசமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2028 வாக்கில், கனடாவில் 30,000 குடும்ப நல மருத்துவர்கள் மற்றும் பொது மருத்துவர்கள் உட்பட 44,000 மருத்துவர்களுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என பெடரல் அரசின் தரவுகள் தெரிவிக்கின்றன.
(Adrian Wyld/Canadian Press)
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |